கடந்த 29.01.2017 அன்று சக்கம்மாள்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வைணவப்பெருமாள் மகன் பாலமுருகன் என்பவரை ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் வைத்து முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஏரல் சேர்வைக்காரன்மடம் பகுதியைச் சேர்ந்த வேதமாணிக்கம் மகன் யோகராஜ் மற்றும் வள்ளியூரைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் சுடலைமணி ஆகிய இருவரையும் ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.