விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றன. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 40 மாணவர்களிடம் பல்கலைக்கழக விதிமுறைப்படி வருகை பதிவேடு குறைவாக இருப்பதாக கூறி மாணவ, மாணவிகளிடமிருந்து தலா 350 முதல் 600 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது