திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று திருத்தேரோட்டம் நடந்தது. இதற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.