அகரம் பேரூராட்சி சத்திரப்பட்டி பிரிவில் சாலை மறியல் நடப்பதாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த வேடசந்தூர் சப் இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார் மற்றும் பாலசுப்பிரமணி தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அங்கு சென்று விசாரித்த பொழுது அது போன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஏற்கனவே போலீஸ் பற்றாக்குறையில் போலீசார் கடுமையான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இது போன்ற பொய்யான தகவலை கொடுத்து போலீசாரை அலைக்கழிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.