வடமதுரை அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி வயது 56. இவர் வடமதுரையில் திருச்சி திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை.