வடமதுரை அருகே உள்ள பிளாத்து கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் புதன்கிழமை காலை 8:30 மணி அளவில் நின்று கொண்டிருந்தது. குறுகலான பாதை என்பதால் எதிரே வந்த அரசு பேருந்துக்கு வழி விடுவதற்காக ரிவர்ஸ் வந்த பொழுது பின்னால் இருந்த மின்கம்பத்தில் பள்ளி பேருந்து மோதியது. இதில் மின் கம்பம் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.