சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் நீண்டநாள் நிலுவையில் உள்ள ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.