வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வேலைகள் நடைபெற உள்ளதால் பத்தாம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, மினுக்கம்பட்டி, வி.புதுக்கோட்டை, விக்குபள்ளம்புதூர், கேத்தம்பட்டி, தோப்புப்பட்டி, குன்னம்பட்டி, குட்டம், ஆசாரிப்புதூர், சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என வேடசந்தூர் உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் அறிவித்துள்ளார்.