மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.இதனையொட்டி அரியலூர் நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சீத்தாராம் யெச்சூரி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் 15 பேர் தங்களது உடல் உறுப்புகளை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்வதற்காக பதிவு செய்தனர்.