வல்லம், செப்.11- தஞ்சை அருகே உள்ள வல்லத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.வல்லம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.