வேடசந்தூர் ஆத்துமேட்டில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேடசந்தூர் ஞான ஒளி பார்வையற்றோர் சங்கத்தினருக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து அய்யர்மடம், வைரக்கவுண்டனூர், புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி அன்னதானம் வழங்கி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.