அரியலூர் மாவட்டம் கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரகம் முன்பு இன்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொகுப்பு வீட்டினை பழுது பார்த்ததாகவும், ஆனால் இதுவரை அதற்கான தொகை வழங்கப்படவில்லை என கூறினர். இதனையடுத்து சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.