சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டிற்கான Anesthesia Technician மற்றும் Theatre Technician சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா. பொற்கொடி, இ.ஆ.ப., பத்திரிகைச் செய்தியில் தெரிவித்துள்ளார். மொத்தம் 37 இடங்கள் காலியாக உள்ளன. (Anesthesia Technician – 18, Theatre Technician – 19). விண்ணப்பதாரர்கள் 31 டிசம்பர் 2025 அன்று 17 வயது பூர்த்தியடைந்தவராகவும், பத்தாம் வகுப்பு அல்லது மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.