சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அண்ணாவாசல் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் (28), சங்கமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற வீட்டு கிரகப்பிரவேச விழாவில் மைக் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் திடீரென அங்கு புகுந்து, அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர். காளீஸ்வரனின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.