தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே பாப்பாக்குடி பகுதியில் மரம் முறிந்து விழுந்து வீடு இடிந்த கூலி தொழிலாளிக்கு புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளனர் தமிழ்நாடு வெற்றி கழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள். மேலும் அந்தத் தொழிலாளியின் மகளின் படிப்பு செலவிற்கும் நிதி உதவி வழங்கி ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளனர்.