சிவகங்கை அருகே உள்ள தொண்டி சாலையில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் முன்பு, டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலி பாட்டில் திரும்பப்பெறும் முறையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட மேலாளர் மீது எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பினர்.