குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனை மற்றும் வீட்டடி மனை பட்டா கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முன்னதாக குஜிலியம்பாறை கடைவீதி வழியாக ஊர்வலமாக வந்த கட்சியினர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாசற்படியில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.