தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பள்ளியூர் கிராம சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே இந்த சாலை உடன் சீரமைக்க வேண்டும் என இப்போது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.