விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாளையம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் வயது 56. இவர் இவர் மனைவி மற்றும் மகன் அருப்புக்கோட்டையில் வசித்து வரும் நிலையில் இவர் மட்டும் குஜிலியம்பாறையில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் குஜிலியம்பாறை அருகே உள்ள அம்மாபட்டி பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முற்பட்ட பொழுது மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் உடல் துண்டு துண்டாகி பலியானார். திண்டுக்கல் இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் அவரது உடலை கைப்பற்றி விசாரணை.