வேடசந்தூர் ஒன்றியம் கூவக்காபட்டி ஊராட்சி வெள்ளைய கவுண்டனூர் அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பத்திற்க்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்தது. இந்த மரங்களை பக்கத்து நிலத்துக்காரர் ஒருவர் பொக்லைன் எந்திரம் மூலம் வேருடன் பிடுங்கி அப்புறப்படுத்தி உள்ளார். அரசு தரிசு நிலத்தில் இருந்த பனை மரங்களை பிடுங்கி போட்டுவிட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை.