சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமித்ஷா தமிழகம் வருவது கூட்டணிக்கு வலு சேர்த்துள்ளது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அடித்தளமாக செயல்படுகிறது என்பது மாற்றுக் கருத்து இல்லை என்றார்.