திண்டுக்கல் மேற்கு: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 25,177 பள்ளி மாணவர்களும், 26,852 மாணவிகளும். 2,542 கல்லூரி மாணவர்களும், 2,605 மாணவிகளும், 334 மாற்றுத்திறனாளி ஆண்களும், 193 பெண்களும், 1,336 பொதுமக்கள் ஆண்களும், 309 பெண்களும், 1768 அரசு அலுவலர்கள் ஆண்களும், 1684 பெண்களும் என மொத்தம் 62,800 நபர்கள் பதிவு செய்து போட்டியில் கலந்து கெண்டனர். இதில் 2,298 நபர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். 700-க்கும் மேற்பட்டோர் மாநில அளவிலான போட்டிக்கு கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்