திருவள்ளூர்: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பாவுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (39). இவரது மனைவி தனலட்சுமியின் அக்கா, தனது கணவரை பிரிந்து வேறொருவருடன் சென்று விட்ட நிலையில் அவரது 14 வயது குழந்தையை தனலட்சுமி வளர்த்து வந்துள்ளார். அத்தகைய சிறுமிக்கு அவருடைய கணவர் வினோத் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், இந்த வழக்கில் திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை இன்று வந்தது வினோத்துக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்,