ஆம்பூர்: பாங்கிஷாப் பகுதியில் தொழிற்சாலைக்கு கொண்டு சென்ற ராசாயன அமிலம் சாலையில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி
ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியில் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ரசாயன அமிலம் இன்று மாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் கொட்டி சாலையோரம் தேங்கியதால் அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் தண்ணீர் அடித்தும் பொதுமக்கள் மண்ணை கொட்டியும் அதனை சரி செய்தனர்.