தஞ்சாவூர்: தேசிய ஊட்டச்சத்து மாதம் : தஞ்சையில் நூற்றுக்கணக்கான சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஊட்டச்சத்து மாதவிலவை முன்னிட்டு சத்துணவு பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற விழிப்புணர் பேரணி இன்று நடந்தது. பேரணி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு அரண்மனை வளாகம் வரை நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியில் தாய்ப்பாலின் அவசியம், கீரை, காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை சாப்பிடுதல் உட்பட ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.