தூத்துக்குடி: முள்ளக்காடு சாமிநகர் பகுதியில் 500 கிராம் கஞ்சா மற்றும் அரிவாளுடன் வாலிபர் கைது
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் முத்தையாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், உதவி ஆய்வாளர் முகிலரசன், தனிப்பிரிவு காவலர் ஜாண்சன், தலைமை காவலர்களான முத்துமணி, திரவிய ரத்தினராஜ், சமியுல்லா ஆகியோர் முள்ளக்காடு சாமி நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.