சிவகங்கை: அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்பட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மு.செல்வகுமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலர் க.ஜெயப்பிரகாஷ் உரையாற்றினார்.