நிலக்கோட்டை: எம்.வாடிப்பட்டியில் குவித்து வைக்கப்பட்ட தென்னை நார் கழிவில் திடீர் தீ விபத்து 3 கிலோமீட்டர் சுற்றளவில் புகை மண்டலம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே எம்.வாடிப்பட்டியில் தரிசு நிலப் பகுதிகள் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் கழிவுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து குவியல், குவியலாக மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் கழிவுகள் அனைத்திலும் தீ பரவியது கொழுந்து விட்டு எறிந்த தீயினால் அப்பகுதியில் பெரும் புகைமூட்டம் கிளம்பியது.