காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி கடந்த ஆண்டு இரு பேரூராட்சிகள், சங்கராபுரம், அரியக்குடி, இலுப்பக்குடி, தளக்காவூர், கோவிலூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது. 350க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம், ரூ.19,500 சம ஊதியம் கோரி இன்று காலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகம் முன்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் துப்புரவுப் பணி பாதிப்பு, குப்பை குவிந்து துர்நாற்றம். பொதுமக்கள் பேச்சுவார்த்தை கோருகின்றனர்.