தூத்துக்குடி: புதிதாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை
தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்த மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் தூத்துக்குடி ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் சிறிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் இந்தியாவில் அனைத்து துறைமுக நகரங்களும் வந்தே பாரத் ரயிலால் இணைக்கப்பட்டுள்ளது. எனவே துறைமுக நகரமான தூத்துக்குடிக்கு கூடுதலாக வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.