தூத்துக்குடி: பெரியாரின் 147வது பிறந்தநாள் தமிழ்ச்சாலை ரோட்டில் அவரது சிலைக்கு அமைச்சர அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி தமிழ்ச்சாலை ரோட்டில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.