காஞ்சிபுரம்: மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வங்கிக்கடன் உதவிகள் வழங்கும் விழாவில் சுமார் 502 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.21 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் வழங்கினார்கள், இதனை தொடர்ந்து 5000 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.