வாலாஜா: மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது- மாவட்ட எஸ்.பி பங்கேற்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் உறுதிமொழியினை முன்மொழிய அதனை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பிற காவலர்கள் வழிமொழிந்து ஏற்றனர். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்று அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் வாழ்வியலாக கொண்டு செயல்பட உறுதிமொழி ஏற்கப்பட்டது