வேடசந்தூர் திண்டுக்கல் ரோட்டில் போக்குவரத்து பணிமனை எதிரே தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி பண்ணை வைத்து வளத்தி வருபவர் தமிழ்வாணன். மாலை 5 மணி அளவில் தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகியது. மேலும் 6 ஆடுகள் படுகாயங்களுடன் உள்ளது. சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சென்று பார்வையிட்டனர்.