தஞ்சாவூர்: பாலிடெக்னிக்கில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு : தஞ்சாவூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்
தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாலிடெக்னிக்கில் 15 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பெருமிதத்துடன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரோடு கலந்து பேசி உயர்கல்வி துறையும் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு பாலிடெக்னிக்கில் 15 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது என்றார்.