சிவகங்கை: சிவகங்கைக்கு புதிய கலெக்டர் அலுவலகம் எப்பொழுது? – பொதுமக்கள் கேள்வி
சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.89 கோடி ஒதுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2024 ஜனவரி 22-ஆம் தேதி அறிவித்திருந்தார். அன்றைய தினம் நடைபெற்ற நலத்திட்ட உதவி விழாவில், ரூ.169 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுடன் இந்த அறிவிப்பும் இடம்பெற்றது.