அரியலூர்: பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா மரியாதை
தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடபடுகிறது. இதனையொட்டி மதிமுக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா தலைமையில் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகேயுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.