வேடசந்தூர்: அரசு ஆஸ்பத்திரி முன்பாக இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல்
வேடசந்தூர் அருகே உள்ள அரிய பித்தம் பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். இவர் தான் பிடித்திருக்கும் குத்தகை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று உள்ளார். அப்பொழுது அங்கு வந்த மூன்று நபர்கள் இது எங்களுக்கு சொந்தமான பாதை இதில் நீ நடக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை எடுத்து மணிகண்டன் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். வேடசந்தூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இந்து மக்கள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.