வேடசந்தூர்: வேலாயுதசாமி ஸ்பின்னிங் மில் குடியிருப்பில் பிட்டர் தூக்கு மாட்டி தற்கொலை
வேடசந்தூர் அருகே வேலாயுதசாமி ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் குடியிருப்பு பகுதியில் குடும்பத்தினருடன் தங்கி இருந்து சின்னாளபட்டியைச் சேர்ந்த திருப்பதி என்பவர் விட்டராக வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினர் அனைவரும் ஊருக்குச் சென்று விட்ட நிலையில் தனியாக இருந்த இவர் கடன் பிரச்சனை காரணமாக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதியின் உறவினர்கள் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.