திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கிராமப்புறங்களில் இருந்து பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் பழமையான பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி புதியதாக கட்டுவதற்கான பூமி பூஜையை காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் இன்று தொடங்கி வைத்தார்