தஞ்சாவூர்: தானத்தில் சிறந்த தானம்... ரத்த தானம் : தஞ்சையில் பிரதமர் பிறந்த நாளை ஒட்டி 75 பேர் ரத்ததானம்
தஞ்சாவூரில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை ஒட்டி தெற்கு மாவட்ட பாஜக மற்றும் சரோ அறக்கட்டளை சார்பில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 75 பேர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வடக்கு மாவட்ட தலைவர் தங்க கென்னடி, பாஜக பல்வேறு அணி தலைவர்கள் கதிரவன் துரைமுருகன் மற்றும் பலர் பேசினர்.