பொன்னேரி: கோட்டைக்குப்பத்தில்
இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு ஏரியை கடந்து கொண்டு செல்லும் அவலம்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள கோட்டைக்குப்பம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பழவேற்காடு ஏரியை கடந்து செல்லும் நிலை உள்ளது. இன்று இளையராஜா என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை இன்று மாலை படகில் கொண்டு சென்று இறுதி சடங்கு செய்தனர். பல ஆண்டுகளாக இத்தகைய அவலம் நீடித்து வருவதால் அப்பகுதியில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை