திருப்பத்தூர்: எப்போ பார்த்தாலும் செல் போன்!அப்படி என்ன தான் இருக்கு அதுல! புதூர் நாடில் ஆவேசம் அடைந்த அம்மா!மனம் உடைந்த மாணவி மருந்து குடித்து உயிரிழப்பு!
சின்னவட்டானூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் காளீஸ்வரி இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.கல்லூரி செல்லும் போது சக மாணவனுடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறதுஇதனை அறிந்த பெற்றோர்கள் மாணவியை கண்டித்து கல்லூரி செல்ல கூடாது என்றும் கூறி நிறுத்தி உள்ளனர்.இதனால் மனம் உடைந்த நிலையில் காளீஸ்வரி செல் போனில் மூழ்கி உள்ளார். எப்போது பார்த்தாலும் செல்போனை வைத்து கொண்டு அதில் கவனம் செலுத்தியதும் மாணவியின் தாய் அதனை கண்டித்ததால் மனம் உடைந்து மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.