அரியலூர்: DYFI சங்க மயிலாடுதுறை வட்ட துணைத்தலைவர் சாதி ஆணவ படுகொலை- அண்ணா சிலையருகே ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வைரமுத்து என்பவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்ட துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணின் சகோதரர்கள், வைரமுத்துவை மறித்து வெட்டி கொலை செய்துள்ளனர். இதனைக் கண்டித்து அரியலூர் அண்ணா சிலையருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.