பெரம்பலூர்: செட்டிகுளம் முருகன் கோயிலில் ரூ 10.30 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூ 10.30 லட்சம் ரொக்கம், 3. 500 மில்லிகிராம் தங்க பொருட்கள், 235 கிராம் வெள்ளி பொருட்களும் கிடைக்கப்பெற்றது