திண்டுக்கல் கிழக்கு: மத்திய பாஜக மோடி அரசின் வாக்கு திருட்டை கண்டித்து மாநகராட்சி அருகே காங்கிரசார் கையெழுத்து இயக்கம்
பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநில சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பாஜக அரசு மோசடி செய்து வெற்றி பெற்றதாகவும் தேர்தல் ஆணையத்தின் இச்செயலை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் மாநகராட்சி அருகில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மாநகர, இளைஞர், மாணவர், மகிலா காங்கிரஸ், எஸ்சி எஸ்டி பிரிவு, வர்த்தகர் சங்க பிரிவு என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்