திருப்பத்தூர்: ஆட்சியரகத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சுமார் 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இதனை தொடர்ந்து போராட்டகாரர்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.